Thursday, November 13, 2014

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் பதவிக் காலம் நீடிப்பு!

Thursday, November 13, 2014
இலங்கை::தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
 
இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் நாடாளுமன்றத் தெரிவுக்குழு நிறுவப்பட்டது.  இந்த ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் எதிர்வரும் 2015ம் ஆண்டு மே மாதம் 15ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
 
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் முக்கிய அரசியல் கட்சிகள் பல பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அமர்வுகளில் பங்கேற்கவில்லை.
 
அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்கவில்லை.

No comments:

Post a Comment