Wednesday, November 19, 2014

மன்னார் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் வடமேல் கடற்படை தளபதிகளால் மன்னாரில் நடத்தப்பட்ட மருத்துவ முகாம்!

Wednesday, November 19, 2014
இலங்கை::
மன்னார் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் வடமேல் மாகாண கடற்படை தளபதிகளால் அண்மையில் மருத்துவ முகாமொன்று நடத்தப்பட்டுள்ளது.
சமூக ஒருங்கிணைப்பு செயற்திட்டத்தின் கீழ் தற்போது புதிதாக மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களின் சுகாதார நன்மை கருதி வடமேல் மாகாண கடற்படைத்தளபதி அட்மிரல் பியால் டி சில்வாவின் ஏற்பாட்டிலேயே இம் மருத்துவ முகாம் முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் மாவட்டத்தின் புதுக்குளம், கரடக்குழி மரிச்சிக்கிட்டி தெற்கு பிரதேசங்ளிலேயே இம்முகாம் நடைபெற்றது. தொற்று நோய்கள் , தொற்றா நோய்களுக்கு மருந்துகள் வழங்கப்பட்டதுடன் , பெண்கள் இளைஞர் யுவதிகள் மற்றும் சிறுவர் குழந்தைகளுக்கு காணப்படுகின்ற சுகாதார பிரச்சினைகள் கேட்டறியப்பட்டு தீர்வுகளும் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment