Wednesday, November 19, 2014
இலங்கை::நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க இடமில்லை என இராணுவம் அறிவித்துள்ளது.
இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பயங்கரவாதம் ஏற்படக் கூடுமென சில சர்வதேச நிறுவனங்கள் எதன் அடிப்படையில் எதிர்வு கூறியுள்ளன என்பது புரியவில்லை என இராணுவப் பேச்சாளர் ருவான் வனிக சூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பு கொள்ளுப்பிட்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் பயங்கரவாதம் தலைதூக்கக் கூடிய அபாயம் காணப்படுவதாக பொருளாதார மற்றும் சமாதானத்திற்கான சர்வதேச நிறுவனம் அண்மையில் எதிர்வு கூறியிருந்தது.
எனினும், இந்த எதிர்வு கூறல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு வகையிலோ இலங்கையில் புலிபயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கக் கூடிய சாத்தியங்கள் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பயங்கரவாத நடவடிக்கை ஏற்பட பாதுகாப்புத் தரப்பினர் இடமளிக்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment