Saturday, November 15, 2014

கனடாவில் விபத்துக்குள்ளான விமானம்! இரு தமிழர்கள் பலி!

Saturday, November 15, 2014
ஒன்ராறியோ::கனடாவில் ஒன்ராறியோ மாகாணத்தில் செஸெனா 150 என்ற சிறு வகை விமானத்தில் லோகேஷ் லக்ஷ்மிகாந்தன்(25) மற்றும் ரவீந்திரன் அருளானந்தம்(31) என்ற இரு நபர்கள் பயணம் செய்துள்ளனர்.

இவர்கள் இருவரும் நியூயார்க் நகரில் வசித்துவரும் தமிழர்கள் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
 
விமானத்தில் எரிபொருள் தீர்ந்து விட்டதால் விமான ஓட்டுநர் லோகேஷ் விமானத்தின் கட்டுப்பாட்டை இழந்து அடர்ந்த காட்டில் உள்ள மரத்தில் விமானத்தை மோதியுள்ளார். இதனை அடுத்து விமானம் விபத்துகுள்ளாகி இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

ஹெலிகாப்டரின் மூலம் நடந்த தேடுதல் வேட்டையில் விமானத்தின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
 
விமானத்தை ஓட்டிய லோகேஷிற்கு ஏற்கனவே 200 மணி நேரம் விமானம் ஓட்டிய அனுபவம் உள்ளதாகவும், விபத்துகுள்ளான விமானத்தை 30 மணி நேரம் முன்கூட்டியே ஓட்டியுள்ளார் என்றும், தேடுதல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
கடந்த திங்கட்கிழமை இரவு தாம் ஆபத்தில் இருப்பதாக விமானி உதவிக்கு அழைத்த போதும் விமானப்படையினரால் அவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் மறுநாள் செவ்வாய்க்கிழமையே கண்டுபிடிக்கப்பட்டபோது லோகேஸ் , மற்றும் ரவீந்திரன் ஆகியோரை சடலமாகவே மீட்க முடிந்தது என தேடுதல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

No comments:

Post a Comment