Saturday, November 15, 2014

முக்கிய நகரை ஈராக் ராணுவம் கைப்பற்றியது!

Saturday, November 15, 2014
பாக்தாத்::ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள பகுதிகளை கைப்பற்றி இஸ்லாமிய நாடு உருவாக்க ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாதிகள் முயற்சி செய்து வருகிறார்கள்.

ஈராக், சிரியாவில் பல நகரங்களை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறார்கள்.

தீவிரவாதிகளிடம் சிக்கி உள்ள நகரங்களை மீட்க ஈராக் ராணுவம் போரிட்டு வருகிறது.

ஈராக்கில் மிகப்பெரிய எண்ணை சுத்திகரிப்பு நிலையம் பைஜி நகரில் இருக்கிறது. இந்த
 
நகரை தீவிரவாதிகள் கைப்பற்றி இருந்தார்கள். இதை மீட்க ராணுவம் தீவிரவாதிகளுடன் கடுமையாக சண்டையிட்டது.

2 வாரம் இரு தரப்பினர் இடையே மோதல் நடந்தது. இதில் ராணுவம் பைஜி நகரை தீவிரவாதிகளிடம் இருந்து மீட்டது. ராணுவத்தின் தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் ஓட்டம் பிடித்தனர்.

மீட்கப்பட்ட பைஜி நகரில் உள்ள எண்ணை சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தான் 50 சதவீத எண்ணை ஈராக்குக்கு சப்ளை செய்யப்படுகிறது. இதனால் முக்கியமான இந்த நகரை ராணுவம் மீட்டது மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.

No comments:

Post a Comment