Saturday, November 15, 2014

ஊடகங்கள் அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை: கெஹலிய ரம்புக்வெல்ல!

Saturday, November 15, 2014
இலங்கை::
ஊடகங்கள் அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
ஊடக அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான வரவு செலவுத்திட்ட விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஊடக சுதந்திரத்தை அரசாங்கம் முடக்க முயற்சிப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற சிறப்புரிமைகள் என்ற போர்வையில் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

ஊடகச் சுதந்திரம் கிடையாது என சிலர் குற்றம் சுமத்தி வருகின்ற போதிலும் ஞாயிறு பத்திரிகைகளைப் பார்த்தால் ஊடகச் சுதந்திரம் எவ்வாறு காணப்படுகின்றது என்பதனை புரிந்து கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவிலாளர்களுக்கு லாப்டப் கணனிகள் வழங்கப்பட்ட போது உரிய விதிகள் முறைகள் பின்பற்றப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment