Saturday, November 15, 2014
சென்னை::தூக்கு தண்டனை ரத்து
செய்யப்பட்ட 5 மீனவர்கள் 2 நாளில் விடுதலையாக வாய்ப்பு உள்ளது.
ராமேசுவரம்
தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர்களான வில்சன், லாங்லெட், அகஸ்டஸ்,
எமர்சன், பிரசாத் ஆகியோர் கடலில் மீன் பிடிக்கச் சென்ற போது இலங்கை
கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டனர்.
அவர்கள் இந்தியாவில் இருந்த
ஹெராயின் போதை பொருள் கடத்திச் சென்றதாக கடந்த 2011–ம் ஆண்டு நவம்பர் மாதம்
5–ந் தேதி கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த இலங்கை
நீதிமன்றம் 5 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்தது. இதைக்கேட்டு தமிழகமே
கொந்தளித்தது. 5 மீனவர்களும் குற்றமற்றவர்கள் அவர்களை விடுதலை செய்ய
வேண்டும் என தமிழகத்தில் ஒட்டு மொத்த அரசியல் கட்சிகளும் போராட்டத்தில்
ஈடுபட்டன.
5 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து மத்திய அரசு சார்பில் இலங்கை கோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த
நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இலங்கை அதிபர்
ராஜபக்சேயுடன் டெலிபோனில் பேசினார். அதன்பிறகு 5 மீனவர்களுக்கும்
பொதுமன்னிப்பு அளிக்க ராஜபக்சே முன் வந்தார்.
இலங்கை தொழிலாளர்
காங்கிரஸ் தலைவரும், இலங்கை மந்திரியுமான ஆறுமுக தொண்டமான், ஊவா மாகாண
மந்திரி செந்தில் தொண்டமான் ஆகியோர் அதிபர் ராஜபக் சேவை நேரில் சந்தித்து 5
தமிழக மீனவர்கள் ஏற்கனவே 2 ஆண்டு ஜெயில் தண்டனை அனுபவித்து விட்டார்கள்.
எனவே அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
இதை ஏற்றுக் கொண்ட அதிபர் ராஜபக்சே 5 மீனவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்கான உத்தரவை அரசு அதிகாரிகளுக்கு பிறப்பித்தார்.
இலங்கை
மந்திரி செந்தில் தொண்டமான் கூறுகையில், 5 மீனவர்களின் தூக்கு தண்டனையை
ரத்து செய்து அவர்களை விடுதலை செய்ய ராஜபக்சே முடிவு செய்து இருக்கும்
தகவலை தெரிவித்தார். ஆனால் அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல்
வெளியிடப்படவில்லை.
என்றாலும் அதிபரின் உத்தரவை நிறைவேற்றுவதில்
இலங்கை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தண்டனையை ரத்து செய்யக்கோரி தாக்கல்
செய்யப்பட்ட அப்பீல் மனு வாபஸ் பெறப்பட்டால் தான் அதிபரின் உத்தரவு
நடைமுறைக்கு வரும். எனவே அப்பீல் மனுவை வாபஸ் பெறுவது பற்றி இந்திய தூதரக
அதிகாரிகள் வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
இன்றும்
நாளையும் கோர்ட்டுக்கு விடுமுறை என்பதால் திங்கட்கிழமை வாபஸ் மனு தாக்கல்
செய்யப்படும் என்றும் கோர்ட்டு நடைமுறைகள் முடிந்ததும் மறுநாள்
(செவ்வாய்கிழமை) 5 மீனவர்களும் விடுதலையாவர்கள் என்று கூறப்படுகிறது.

No comments:
Post a Comment