Wednesday, November 5, 2014

தமிழ் தேசிய கூட்டமைப்பு புலிகளின் பிரிவினைவாதத்தை இன்னும் கைவிடவில்லை!

Wednesday, November 05, 2014
இலங்கை::அரசியலமைப்புக்கான 18ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னரே ஜனாதிபதி இரண்டா வது தடவையாக ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளதால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாகப் போட்டியிடுவதற்கு எதிராக முன்வைக்கும் வாதம் பொய்யானதாகும் என ஸ்ரீலங்கா சுந்திரக் கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.
 
18 ஆவது திருத்தத்தினூடாக மக்களின் ஆணையும் வாக்குரி மையும் பரவலாக்கப்படுவதாக உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
தமிழ் தேசிய கூட்டமைப்பு புலிகளின் பிரிவினைவாதத்தை இன்னும் கைவிடவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடக மாநாடு நேற்று கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது. இங்கு அமைச்சர்க ளான எஸ். பி. திசாநாயக்க, டிலான் பெரேரா, திலங்க சுமதிபால ஆகியோர் உரையாற்றினர்.
 
புலிகளின் பிரிவினைவாதத்தை கைவிட்டால் ஜனாதிபதி முறையை ஒழிக்க தயார் என ஜனாதிபதி அறிவித்துள்ளார். தாம் ஜனாதிபதி முறையை கைவிட்டுள்ளதாக த. தே. கூ. உறுப்பினர் சுமந்திரன் கூறிய போதும் ஐரோப்பிய ஒன்றியத்தில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டதை த. தே. கூ. எம்.பிகள் வரவேற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மைச்சர் டிலான் பெரேரா குறிப்பிட்ட தாவது:
 
2010 ஜனவரியில் ஜனாதிபதி இரண்டாவது தடவையாக வெற்றியடைந்த போதும் 2010 நவம்பரில் தான் பதவி ஏற்றார். 18 ஆவது திருத்தம் செப்டம்பர் 18 ஆம் திகதியே நிறைவேற்றப்பட்டது. அவர் இரண்டாவது தடவையாக பதவி ஏற்கும் போது ஒருவர் 2 தடவைக்கு மேல் ஜனாதிபதியாக பதவி வகிக்கமுடியாது என்ற சரத்து நீக்கப்பட்டிருந்தது. எனவே ஜனாதிபதி மூன்றாவது தடவையாக போட்டியிட முடியாது என்ற வாதம் பயனற்றதாகிறது.
 
18 ஆவது திருத்தத்திற்கு எதிராக 2010 இல் சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களின் போது சிராணி பண்டாரநாயக்க தீர்ப்பளித் தார். இந்த திருத்தம் மக்களாணையையும் வாக்குரிமையையும் விஸ்தரிப்பதாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
 
கடந்த காலங்களில் ஜனாதிபதி ஒருவரின் இரண்டாவது தடவை முடிவடைய போகும் நிலையில் அரச அதிகாரிகள் அரச தலைவரை பொருட்படுத்தாமல் செயற்படும் நிலை இருந்தது. 18 ஆவது திருத்தத்தினூடாக நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
 
திலங்க சுமதிபால எம்.பி. கூறியதாவது:
 
ஜனாதிபதி ஒருவர் இரண்டு தடவைக்கு மேல் போட்டியிட முடியாது என்ற தடங்கல் 18 ஆவது திருத்தத்தினூடாக நீக்கப்பட்டது. 2 தடவைகள் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தவருக்கு மூன்றாவது தடவையாக போட்டியிட வாய்ப்பு இருக்கையில் வென்றவருக்கு தடைபோடுவது அடிப்படை உரிமை மீறலாகும். மக்களை தவறாக வழிநடத்தும் கருத்துக்களையே எதிர்க் கட்சிகள் பேசுகின்றன.

No comments:

Post a Comment