Wednesday, November 5, 2014

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்யுமாறு பிரதி அமைச்சர் சரத் வீரசேகர கோரிக்கை விடுத்துள்ளார்!

Wednesday, November 05, 2014
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்யுமாறு பிரதி அமைச்சர் சரத் வீரசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.
 
பாராளுமன்றில் வரவு செலவுத்திட்ட விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும்  புலிகளின் கொள்கைகளை கோட்பாடுகளை பின்பற்றி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

புலிகள் தோற்கடிக்கப்பட்ட உடனேயே அதனுடன் தொடர்புடைய அனைத்து அமைப்புக்களையும் தடை செய்திருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கும் நோக்கில் அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்யவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக புலிகளின் கொள்கைகளை பின்பற்றி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

No comments:

Post a Comment