Wednesday, November 5, 2014

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வைகோவை வெளியேற்ற வேண்டும்: சுப்பிரமணியசாமி!

Wednesday, November 05, 2014
புதுடெல்லி::பா.ஜ.க.வினரிடையே வைகோ மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அக்கட்சியில் முதல் நபராக, மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமனிய சாமி வைகோவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.

‘கூட்டணி கொள்கைக்கு எதிராகவும், கூட்டணிக்கு விரோதமாகவும் பேசிவரும் ம.தி.மு.க., தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிக்க வேண்டுமா? என்பது தொடர்பாக பா.ஜ.க. தலைவர் அமித் ஷா மற்றும் கட்சிப் பொறுப்பாளர் ராஜிவ் பிரதாப் ரூடி ஆகியோரிடம் நான் பேசியுள்ளேன்.

உங்கள் கட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஏன் விலக்கக் கூடாது என்று விளக்கம் கேட்டு வைகோவுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளேன்’ என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் சுப்பிரமணியசாமி குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment