Wednesday, November 05, 2014
நியூயார்க்::ஐ.நா. பொதுச்சபையில் நடந்த ஒரு விவாதத்தில் பாகிஸ்தான் பிரதிநிதி தியார்
கான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் காஷ்மீர் பிரச்சினையை
எழுப்பினார். தங்கள் சுய நிர்ணய உரிமைக்காக காஷ்மீர் மக்கள் தவிப்பதாக
கூறினார். இதில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்தியாவின் பிரதிநிதி மாயங் ஜோஷி பதில் அளிக்கையில், காஷ்மீரைப்பற்றிய பாகிஸ்தானின் பிரதிநிதி கூறுவது தவறான தகவல், காஷ்மீரில் எல்லா மட்டத்திலும் நியாயமான, சுதந்திரமான தேர்தல் ஒழுங்காக நடத்தப்பட்டு வருகிறது என கூறினார். மேலும், இந்தியா பல்வேறு மதங்கள், இனங்கள், மொழிகள் கொண்ட சமூகத்தை உள்ளடக்கியது. எல்லா வடிவத்திலுமான பேதங்களை ஒழிப்பதில் இந்தியா உறுதி பூண்டுள்ளது என கூறினார்.
ஆனால் காஷ்மீர் தேர்தல், ஐ.நா. சபையாலும், காஷ்மீர் மக்களாலும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தியார் கான் பேசினார். அதற்கு மாயங் ஜோஷி, சர்வதேச ஊடகத்தின் மேற்பார்வையில்தான் காஷ்மீரில் தேர்தல் நடத்தப்படுகிறது. எந்த தவறும் யாரும் கூறியதில்லை என பதிலடி கொடுத்தார்.

No comments:
Post a Comment