Friday, November 7, 2014

பிரதமர் டி.எம். ஜயரட்னவின் இந்திய விஜயத்தை முன்னிட்டு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

Friday, November 07, 2014
இலங்கை::பிரதமர் டி.எம். ஜயரட்னவின் இந்திய விஜயத்தை முன்னிட்டு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிரதமர் ஜயரட்ன நாளைய தினம் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார். மனிப்பால் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் ஜயரட்ன பிரதம அதிதியாக கலந்து கொள்ள உள்ளார்.

மங்களுர் விமான நிலையத்திலிருந்து மனிபால் வரையிலான பாதையில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் பயணம் செய்யும் பாதைகள் மற்றும் தங்கியிருக்கும் ஹோட்டல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இவ்வாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதேசத்தின் விடுதிகளில் தங்கியிருக்கும் நபர்கள் பற்றிய தகவல்களும் திரட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment