Friday, November 7, 2014

யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 24 மீனவர்களின் காவல் நீட்டிப்பு!

Friday, November 07, 2014
இலங்கை::இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள  ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் நாகை மாவட்டங்களைச் சேர்ந்த 24 மீனவர்களின் காவலை நவம்பர் 21ம் தேதி வரை நீட்டித்து ஊர்க்காவல் துறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

செப்டம்பர் 27, 30 மற்றும் அக்டோபர் 7ம் தேதிகளில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 24 தமிழக மீனவர்களுக்கும் காவல் நீட்டிக்கப்பட்டதை அடுத்து மீண்டும் அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment