Friday, November 7, 2014

வெளிநாடுகளுக்கு நீண்ட கால பயணங்களை மேற்கொள்பவர்கள் தேசிய அடையாள அட்டையை கொண்டுசெல்வதற்க்கு கட்டுப்பாடு!

Friday, November 07, 2014
இலங்கை::வெளிநாடுகளுக்கு நீண்ட கால பயணங்களை மேற்கொள்பவர்கள் தேசிய அடையாள அட்டையை கொண்டுசெல்வதற்க்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன.
ஆள்பதிவு திணைக்கள ஆணையாளர் சரத்குமார இதனை தெரிவித்துள்ளார்.
 
தேசிய அடையாள அட்டையில் விபரங்கள் சிங்களம் மற்றும தமிழில் மாத்திரமே காணப்படுவதால்அதனை வெளிநாடுகளுக்கு கொண்டுசெல்ல வேண்டிய தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடுகளுக்கு நீண்ட காலப்பயணங்களை மேற்கொள்பவர்கள் அடையாள அட்டைகளை கொண்டுசெல்வது தொடர்பாக கடுமைiயான நடைமுறைகளை பின்பற்றவுள்ளோம். வெளிநாடுகளிலுள்ள தூதரகங்களுக்கு இது குறித்து அறிவுறுத்துவதற்காக வெளிவிவகார அமைச்சுடன் பேச்சுக்களை மேற்கொள்ளவுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
    

No comments:

Post a Comment