Thursday, November 20, 2014
இலங்கை::மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து இந்திய மீனவர்களை விடுதலை செய்தமை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ வுக்கு நன்றி தெரிவிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.
இலங்கை::மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து இந்திய மீனவர்களை விடுதலை செய்தமை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ வுக்கு நன்றி தெரிவிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பதனை இந்திய உயர்ஸ்தானிகராலயகம் உறுதிப்படுத்துகின்றது. இந்த விடயத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் மனிதாபிமான செயற்பாட்டுக்காக நன்றி தெரிவிக்கின்றோம். இது இரண்டு நாடுகளினதும் நட்புறவை மேலும் பலப்படுத்தும்
. கடந்த ஒன்பதாம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் தொலைபேசியில் உரையாடியமையை இங்கு நினைவூட்டுகின்றேன். குறித்த மீனவர்களை இந்திய உயர்ஸ்தானிகர் சந்தித்து பேசினார். அவர்களை இந்தியாவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment