Thursday, November 20, 2014
இலங்கை::ஜனாதிபதித் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய குழு நேற்றிரவு தீர்மானத்தை நிறைேவற்றியுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் புதன்கிழமை இரவு கூடிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் சுமார் மணி நேரம் நீடித்துள்ளது.

இந்நிலையில் மணியளவில் இத்தீர்மானம் கட்சி மத்திய குழுவால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்துக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக மகிந்த ராஜபக்ஷ பெயரை கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் அமைச்சருமான நிமால் சிறிபால டி சில்வா பிரேரிக்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி வழி மொழிந்துள்ளார்.
நீண்ட நேர விவாதத்தின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக சுதந்திரக் கட்சி வட்டாரம் தெரிவித்தது. இதன் பிரகாரம் இந்த முடிவை உடனடியாக வர்த்தமானியில் பிரசுரிப்பதற்காக அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டது.

No comments:
Post a Comment