Thursday, November 20, 2014
இலங்கை::சுவிஸ்லாந்துக்கான இலங்கைக்கான தூதுவர் ஹெய்ன்ஸ் வோக்கர் நெடர்கூனுக்கும் வடமாகாண ஆளுனர் ஜி.ஏ சந்திரசிறிக்குமிடையே விசேட சந்திப்பு ஒன்று நேற்று (19) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இலங்கை::சுவிஸ்லாந்துக்கான இலங்கைக்கான தூதுவர் ஹெய்ன்ஸ் வோக்கர் நெடர்கூனுக்கும் வடமாகாண ஆளுனர் ஜி.ஏ சந்திரசிறிக்குமிடையே விசேட சந்திப்பு ஒன்று நேற்று (19) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
வடக்கின் தற்போதைய அபிவிருத்தி நிலைமைகள் தொடர்பாக ஆராயும் நோக்கில் சுவிஸ் தூதுவர் தலைமையில் யாழ் விஜயம் செய்த இக்குழு வடமாகாண ஆளுனர் ஜி.ஏ சந்திரசிறியை அவரது அலுவலகத்தில் சந்தித்து வடக்கின் தற்போதைய மற்றும் எதிர்காலத்திட்டங்கள் தொடர்பாக கேட்டறிந்தது.
இதன்போது வடக்கில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்திகள் தொடர்பாகவும் கல்வி, பொருளாதாரம், சுகாதாரம், உட்கட்டுமானம் போன்றவற்றில் வடமாகாண தற்போது அடைந்துள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக ஆளுனரினால் தூதுவர் குழுவிற்கு விளக்கமளிக்கப்பட்டது.
ஆளுனரின் செயலாளர் இ.இளங்கோவனும் இச்சந்திப்பின் போது உடனிருந்தார்.

No comments:
Post a Comment