Thursday, November 20, 2014

கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் ஜனாதிபதி அவர்களால் புதிய கட்டடம் திறந்து வைக்கப்பட்டது!

     
     
     


 
Thursday, November 20, 2014
இலங்கை::சேர் ஜோன் கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் சுகாதார விஞ்ஞான பீடத்திற்காக புதிதாக நிர்மானிக்கப்பட்ட கட்டடம் ஜனாதிபதி அவர்களால் நேற்று (நவ.20) திறந்து வைக்கப்பட்டது.
 
சேர் ஜோன் கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் காணப்படும் விஞ்ஞான பீடமானது இலங்கையில் காணப்படுகின்ற ஒரே ஒரு தேசிய இராணுவ விஞ்ஞான பீடமாகும், இதில் சிறந்த தேர்ச்சி பெற்ற கல்வி மற்றும் மருத்துவ நிபுணர்களினால் மாணவர்கள் பயிற்றுவிக்கப்படுவதுடன் இராணுவ மருத்துவ மாணவர்களின் பயிற்சிகள் மற்றும் பட்டம் இப்பீடத்தினூடாக வழங்கப்படுகின்றது.
 
202 மில்லியன் அமரிக்க டொலர் செலவில் சீன பொலி டெக்னொலஜீஸ் நிருவனத்தினால் நிர்மானப்பணிகள் மேற் கொள்ளபடுவதுடன் இது வேரஹேர பகுதியில் 56 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மானிக்கப்பட்டு வருகிறது இதன் வடிவமைப்பு சிங்கப்பூரைச் சேர்நத 5 கட்டடக்கலை நிபுனர் குழுக்களால் மேற்கொள்ளப்பட்டது.
 
மேலும் சேர் ஜோன் கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் தெற்காசியாவில் பாதுகாப்புத் துறையில் பட்டதாரிகளை உறுவாக்கும் ஒரே ஒரு பல்கலைக்கழகமாகும் அதுமட்டுமன்றி ஐக்கிய இராச்சிய பொதுநலவாய பல்கலைக்கழக அமைப்புக்களிலும் இது அங்கத்துவம் வகிக்கின்றது.
 
இந்நிகழ்வில் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு. கோடாபய ராஜபக்ஷ அவர்கள், பாதுகாப்புப் படைகளின் பிரதானி, இராணுவத் தளபதி, கடற்படை தளபதி, விமானப்படைத் தளபதி, கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், பொலி டெக்னொலஜீஸின் அதிகாரிகள், பயிற்சி அதிகாரிகள், மற்றும் உள்நட்டு, வெளிநாட்டு மாணவர்களும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment