Friday, November 21, 2014
இலங்கை::பிராந்திய கடல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக ஆராயும் பிகோல் டயலொக் -2014பீ உயர் மட்ட பாதுகாப்பு மாநாடு 2014 டிசம்பர் 01,02 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
கடற்படையின் ஏற்பாட்டில் காலி துறைமுக நகரில் ஆரம்பமாகவுள்ள இந்த உயர் மட்ட பாதுகாப்பு மாநாட்டை பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைக்கவுள்ளதுடன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் இடம் பெறவுள்ளது.
பிகடல்சார் சுபீட்சத்துக்கான ஒத்துழைப்புபீ என்ற தொனிப் பொருளில் பிராந்திய கடல் பாதுகாப்பு மேம்படுத்தல் பிராந்திய கடல் வழி பாதுகாப்பு போன்றவைகள் தொடர்பாக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சும் இலங்கை கடற்படையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த உயர் மட்ட பாதுகாப்பு மாநாட்டில் கடந்த 11 மாதங்களாக இடம் பெற்ற நிகழ்வுகள் சம்பந்தமாக கலந்துரையாடப்படவுள்ளது.
40 நாடுகளின் கடல்சார் நிபுணர்கள் கடற்படை உயர்அதிகாரிகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு புத்திஜீவிகள் கலந்து கொள்ளும் இந்த உயர் மட்ட நாட்டில் கடல்சார் பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளது.

No comments:
Post a Comment