Friday, November 21, 2014
சென்னை::இலங்கையில் தூக்கு
தண்டனை பெற்று விடுதலையான தமிழக மீனவர்கள் 5 பேரும் டெல்லி அழைத்து
செல்லப்பட்டனர். அங்கு பிரதமர் மோடியை சந்திப்பார்கள் என்று
எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மோடியை சந்திக்காமல் திரும்பினார்கள். இது
பற்றி மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:–
மனிதாபிமான
அடிப்படையில் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் செய்ய வேண்டிய கடமையை பிரதமர்
மோடி செய்து இருக்கிறார். இது விளம்பரத்துக்காக நடத்தப்பட்ட செயல் அல்ல.
அப்படி விளம்பரம் தேட வேண்டிய நிலை பா.ஜனதாவுக்கு இல்லை.
ஒவ்வொரு
விசயத்திலும் நுணுக்கமான சில விசயங்கள் இருக்கும். அடிப்படையான எல்லா
செயல்களுக்கும் விளக்கம் கேட்பது முறையாக இருக்காது. ஒரு பிரதமராக இருந்து
நாட்டு மக்களுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமையை செய்து இருக்கிறார்.
இதை அரசியல் நாடகம் என்று, அரசியல் நாடகம் ஆடிக்கொண்டிருப்பவர்களுக்கு இப்போது புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன்.
இந்திய
வரலாற்றில் மோடி ஒரு சரித்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறார். விடுதலையான
மீனவர்களிடம் நான் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் உணர்ச்சி
பெருக்குடன் ‘மரணத்தின் வாயில் வரை சென்ற எங்களை பிரதமர் மோடி மீட்டுவந்து
எங்கள் உயிரை காப்பாற்றி மறுவாழ்வு கொடுத்துள்ளார். மோடியை தவிர யார்
பேசினாலும் ராஜபக்சே கேட்டிருக்க மாட்டார்’ என்றார்கள்.
பிரதமர்
அலுவலகமும், வெளியுறவுத்துறையும் எடுத்த தொடர் முயற்சியால் இந்த சரித்திர
நிகழ்வு நிகழ்ந்துள்ளது. அதற்காக தமிழக மக்கள் என்றும் நன்றிக்கடன்
பட்டுள்ளார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment