Friday, November 21, 2014
இலங்கை::எரிக் சொல்ஹெய்ம் சமாதானத் தூதுவராக காட்டிக் கொண்டு இலங்கைக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தி உள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, எரிக் சொலஹெய்ம் தொடர்பில் பாரிய முரண்பாடான விடயங்கள் இருக்கின்றன. அவர் உண்மையில் ஒரு சமாதானத் தூதுவர் இல்லை.
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் புலிகளுக்கு ஆயுதங்கள் மற்றும் நிதியுதவிகளை அளித்த விடயத்திலும் எரிக் சொலஹெய்ம் நேரடியாக தொடர்புபட்டுள்ளார்.
எரிக் சொலஹெய்ம் ஒரு காலகட்டத்தில் இலங்கையை அழிவுப் பாதைக்குள் தள்ளிவிடும் கடுமையான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார் என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment