Thursday, November 20, 2014
புதுடெல்லி::இலங்கையில் விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரும் இன்று மாலை விமானம் மூலம் டெல்லி வருவார்கள் என்று எதிபார்க்கப்படுகிறது. திருச்சி வருவதாக இருந்த பயணத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. போதை பொருள் கடத்தப்பட்டதாக கூறி மரண தண்டணை விதிக்கப்பட்ட தமிழக மீனவர் நேற்று சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரும் டெல்லிக்கு இன்று மாலை அழைத்துவரபடுகிறார்கள்.
வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் பிரதமரையும் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை அதிகாரபூர்மான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் இந்தியாவுக்கு அழைத்துவர பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அனைத்து கட்சி தலைவர்களும் மத்திய அரசுக்கு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக நேற்று இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் 5 பேரும் டெல்லிக்கு அழைத்துவரபடுகிறார்கள் என்று வெளியுறவு துறை தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment