Thursday, November 20, 2014
மும்பை::2010–ம் ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடந்தது.இந்தப்போட்டியின்
போது இந்திய அணியின் முன்னணி வீரர் ஒருவரின் ஓட்டல் அறையில் அழகி ஒருவர்
அதிகாலை 4 மணி வரை தங்கி இருந்த தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது.
ஐ.பி.எல்.
ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி முத்கல் கமிட்டி
விசாரணை நடத்தி சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கையை தாக்கல் செய்தது.
இந்த
விசாரணை குழு இலங்கையில் உள்ள ஓட்டல் அறையில் இந்திய முன்னணி வீரருடன்
தங்கி இருந்த அழகியிடம் விசாரணை செய்ததாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
இந்த
அழகி மேனேஜ்மென்ட் கம்பெனி ஒன்றின் நிர்வாகி என்பது தெரியவந்தது. தனது
மகள் அப்பாவி என்று அந்த அழகியின் பெற்றோர் முத்கல் குழுவிடம் தெரிவித்ததாக
கூறப்படுகிறது.
அந்த அழகி அன்று இரவே தமுல்லாவில் இருந்து கொழும்பு
செல்ல இருந்தார். வீரர்களின் வற்புறுத்தலின் பேரில் அவர் ஓட்டல் அறையில்
தங்கி இருந்ததாக அந்த தகவல் தெரிவிக்கின்றன.
சூதாட்ட விசாரணை அறிக்கையில் இடம் பெற்றுள்ள ஒரு வீரரின் (தனிநபர் 3) அறையில் தான் அந்த அழகி தங்கி இருந்தார் என்றும் கூறப்படுகிறது.
இதில்
இன்னொரு வேடிக்கை என்னவென்றால் அந்த அழகி தற்போதைய இந்திய அணியில் இடம்
பெற்றுள்ள மற்றொரு வீரரை திருமணம் செய்ய இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை போட்டிக்கு பிறகு இந்த திருமணம்
நடைபெறுகிறது.

No comments:
Post a Comment