Wednesday, November 12, 2014

ஆசியான் மாநாட்டில் மலேசிய பிரதமருடன் நரேந்திர மோடி சந்திப்பு!

Wednesday, November 12, 2014
நேபிடா::ஆசியான் மாநாட்டில் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்கை நரேந்திர மோடி சந்தித்து பேசினார்.
பிரதமர் நரேந்திரமோடி மியான்மர், ஆஸ்திரேலியா, பிஜி தீவு ஆகிய நாடுகளில் 10 நாள் சுற்றுப்பயணம் செய்கிறார். முதல் கட்டமாக அவர் மியான்மர் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
 
மியான்மரின் தலைநகர் நேபிடா நகரில் 121–வது ஆசியான் – இந்தியா மாநாடு இன்றும், நாளையும் நடக்கிறது. அதன்படி மாநாடு இன்று தொடங்குகிறது.
 
மாநாட்டின் போது மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்கை சந்தித்து பேசினார். அப்போது, ‘‘கடந்த காலங்களில் இந்தியாவும், மலேசியாவும் இணைந்து பணியாற்றியுள்ளன. அதே நிலை தனது தலைமையின் கீழ் இயங்கும் அரசும் செயல்படும்’’ என்றார்.
 
பிரதமர் நஜிப் ரசாக்கை சந்தித்த பிறகு பிரதமர் நரேந்திரமோடி மலேசிய நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யும்படி அழைப்பு விடுத்தார். அது குறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:–
 
சந்திப்பின் போது இருநாட்டு தலைவர்களும் பரஸ்பரம் தங்கள் நாட்டுகளுக்கு வரும்படி அழைப்பு விடுத்துக் கொண்டனர்.
மேலும் தங்களின் அரசுகள் குறித்தும், பொருளாதார சீரமைப்பு குறித்தும் இருவரும் விவாதித்தனர். இந்த தகவலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் சையது அக்பக்ரூதீன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
 
இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற திட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதே வேளையில் மலேசிய நிறுவனங்கள் இந்தியாவுக்கு வர வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன். இந்தியாவில் தொழில் தொடங்க அதிக வாய்ப்புகள் உள்ளன. ஜப்பான், தென் கொரியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் இருந்து வர்த்தக ரீதியாக இந்தியாவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. வீடு கட்டுமான தொழில் மலேசியாவில் சிறப்பாக நடைபெறுகிறது.
அக்கம்பெனிகள் இந்தியாவிலும் பணியாற்ற முடியும். ஏனெனில் எனது தலைமையிலான அரசு வருகிற 2022–ம் ஆண்டிற்குள் ஒவ்வொரு இந்தியருக்கும் சொந்தவீடு இருக்க வேண்டும் என விரும்புகிறது’’ என்றும் டுவிட்டரில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment