Wednesday, November 19, 2014

புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்தநாளை கொண்டாடுவோம்: புலி பினாமி வைகோ!

Wednesday, November 19, 2014
சென்னை::ம.தி.மு.க. பொதுச்செயலாளர் புலி பினாமி வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
 
இந்திய அரசும், சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, ஈரான், இஇரேல் அரசுகளும் சிங்கள வனுக்கு வழங்கிய ஆயுதங்களும், இந்தியத் தளபதிகள், மிக நவீன போர்க் கருவிகளை, மின்னணுச் சாதனங்களைச் சிங்களப் படைகளுக்குப் பக்கபலமாக நிறுத்தி யுத்தத்தை நடத்தியதாலும்,  குண்டுகளைப் பயன்படுத்தியதாலும் புலிகளுக்கு உணவும், மருந்தும், ஆயுதங்களும் எந்த நாட்டிலிருந்தும் கிடைக்கப் பெறாததாலும் யுத்தத்தில் புலிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டது.
 
நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளை கருப்பின மக்கள் கொண்டாடுவது போல், லெனின் பிறந்த நாளை பொதுவுடமைவாதிகள் கொண்டாடுவதுபோல், ஜார்ஜ் வாஷிங்டன் பிறந்த நாளை அமெரிக்கர்கள் கொண்டாடுவதுபோல், தந்தை பெரியாரின் பிறந்த நாளையும், பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளையும் நாம் கொண்டாடுவது போல், புலிகளின் வரலாற்றில் பேரொளி வெளிச்சம் தரும் பிரபாகரன் பிறந்தநாளையும் தாய்த் தமிழகத்திலும், உலக மெங்கிலும் நாம் கொண்டாடுவோம்.
 
அகிலத்தின் பல நாடுகளில் வாழும் புலி தமிழர்களே, புலம் பெயர்வாழ் புலிகளின்ஈழ உறவுகளே. வரும் நவம்பர் 26–ந்தேதி அன்று அவர் பிறந்த நேரமான முன்னிரவு 7 மணி 18 நிமிடம் அளவில், தமிழகத்தில் கொண்டாடுவோம். நவம்பர் மாதம் 26–ந்தேதி அந்த நாட்டு நேரம்படி விழா எடுப்போம். வானவெளியில் வாண வேடிக்கைகள் நடக்கட்டும்; பட்டாசு வெடிகள் முழங்கட்டும்; சர்க்கரைப் பொங்கல் வழங்கப்படட்டும்; ஆலயங்கள், வழிபாட்டுத் தலங்களுக்கு செல்கின்றவர்கள் பூசை நடத்தட்டும்.
 
தலைவர் பிரபாகரனின் 60–வது பிறந்தநாள் விழாவில்   வாழ்த்து முழக்கம் விண்ணை முட்டட்டும். சுதந்திரத் தமிழ் ஈழ விடியலுக்குக் கட்டியம் கூறும் விதத்தில் தாய்த் தமிழகத்திலும், உலகம் எங்கிலும் புலிதமிழர்கள் தமிழ்க்குலத் தலைவனின் பிறந்தநாளைக் கொண்டாடுங்கள்.
 
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment