Wednesday, November 19, 2014

உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கு அமைச்சர் அதாஉல்லாவினால் மோட்டார் சைக்கிள் வழங்கி வைப்பு!


DSC_0239DSC_0212DSC_0182
Wednesday, November 19, 2014
இலங்கை::உள்ளுராட்சி சபைகளின் மக்கள் பிரதிநிதிகளுக்காக சுமார் 210,000 ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிள்கள் முதலாம் கட்டமாக வழங்கும் நிகழ்வு பத்ரமுதல்ல புத்ததாச விளையாட்டு மைதானத்தில் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா தலைமையில் நடைபெற்றது.
 
நிகழ்வின்போதுஉள்ளுராட்சி சபைகளின் ஒரு சில மக்கள் பிரதிநிதிகளுக்கு அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா உத்தியோகபூர்வமாக மோட்டார் வாகனங்களை வழங்கி வைப்பதனை படங்களில் காணலாம்.
 
இந்நிகழ்வில் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ.ஏ.கேரணவக்க, பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் டாக்டர் நிஹால் ஜயதிலக,மேலதிக செயலாளர்களான ஏ.அப்துல் மஜீட், டபிள்யு. விக்ரமசிங்க ஆகியோரையும் படங்களில் காணலாம்.

No comments:

Post a Comment