Wednesday, November 19, 2014

யாழ். மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களுக்குள் 17 பேர் வீதி விபத்துக்களால் உயிரிழப்பு!

Wednesday, November 19, 2014
இலங்கை::யாழ். மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களுக்குள் 17 பேர் வீதி விபத்துக்களால் உயிரிழந்துள்ளதாக, யாழ். போக்குவரத்து பொலிஸார் செவ்வாய்கிழமை (18) தெரிவித்தனர். 
 
வீதிகளில் வாகன விபத்துக்களினால் ஏற்படும் இறப்புக்களையும் பாதிப்புக்களையும் தடுத்தல் தொடர்பான ஊடகவியலாளர் கலந்துரையாடல் யாழ். போதனா வைத்தியசாலை மாநாட்டு மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட போக்குவரத்து பொலிஸாரே மேற்கண்டவாறு கூறினர். 
 
இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில், 
 
யாழ். மாவட்டத்தில் வீதி விபத்துக்கள் நாளாந்தம் அதிகரித்து செல்கின்றன. மது போதையில் வாகனம் செலுத்துவதால், ஏற்படும் விபத்தை விட அலைபேசி பாவனையால் ஏற்படும் விபத்துக்களே அதிகமாக காணப்படுகின்றன.

No comments:

Post a Comment