ஜெனீவா::புலிகளின் கறுப்புப் பணம் தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்படவில்லை என சுவிட்சர்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2011ம் ஆண்டு இந்த விடயம் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாத நிதிக் கொடுக்கல் வாங்கல்கள், கப்பம்கோரல்கள் மற்றும் கறுப்புப் பண கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடையவர்கள் குறித்த விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என சுவிட்சர்லாந்து சட்ட மா அதிபர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் இந்த சம்பவம் குறித்த மேலதிக தகவல்களை வெளிப்படுத்த முடியாது என சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.


No comments:
Post a Comment