Monday, November 17, 2014இலங்கை::யாழ்ப்பாணம், துன்னாலை, கோட்டப்பளை பகுதியில் கசிப்பு வடித்த 26 வயதுடைய பெண் சந்தேகநபர் ஒருவரை சனிக்கிழமை (15) கைது செய்ததாக நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுமித்.சி.பெரேரா ஞாயிற்றுக்கிழமை (16) தெரிவித்தார்.
குறித்த பெண்ணின் வீட்டுக்கு விசாரணைக்காகச் சென்ற பொலிஸார், அப்பெண் கசிப்பு வடிப்பதைக் கண்டு அவரை கைது செய்துள்ளனர்.
அத்துடன், இரண்டு போத்தல் கசிப்பு, 10 லீற்றர் சோடா மற்றும் கசிப்பு வடிப்பதற்கு பயன்படுத்தும் உபகரணங்கள் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment