Monday, November 10, 2014

இணுவில் பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!

Monday, November 10, 2014
இலங்கை::இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவமொன்று இன்று இணுவில் பகுதியில் இடம் பெற்றுள்ளது. 
 
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது 
 
மோட்டார் சைக்கிளில் வந்த முதியவர் மஞ்சள் கோட்டுப் பகுதியால் மோட்டார் சைக்கிளை திருப்ப முற்படுகையில் எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் மோதுண்டதனால் இவ்விபத்து ஏற்பட்டதாகவும் அதில் இருவரும் காயமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment