Monday, November 10, 2014

தூக்கு தண்டனை பெற்ற 5 மீனவர்களை மீட்க மோடி தீவிரமாக உள்ளார்: பொன்.ராதாகிருஷ்ண!

 Monday, November 10, 2014
சென்னை::தூக்கு தண்டனை பெற்று இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 5 பேர் நிலை குறித்து, பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
 
இதுகுறித்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:–
தூக்கு தண்டனை பெற்ற தமிழக மீனவர்கள் 5 பேர் இலங்கை சிறையில் உள்ளனர். இவர்களை வழக்குகளில் இருந்து விடுவிப்பதற்கான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
 
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோர் இதற்கான தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். அதே நேரத்தில் 5 மீனவர்களையும் தமிழக சிறைக்கு கொண்டு வர ராஜிய ரீதியிலான முயற்சிகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது.
 
இது தொடர்பான அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் வெளியிடப்பட வில்லை.
 
இவ்வாறு பொன்.ராதா கிருஷ்ணன் கூறினார்.

No comments:

Post a Comment