Monday, November 10, 2014

யாழ்ப்பாணம் மும்மொழிக் கற்கை நிலையத்தின் ஏற்பாட்டில் சிங்கள மொழிக் கற்கை கருத்தரங்கு !


Monday, November 10, 2014
இலங்கை::யாழ்ப்பாணம் மும்மொழிக் கற்கை நிலையத்தின் ஏற்பாட்டில் சிங்கள மொழிக்  கற்கை கருத்தரங்கு ஒன்று கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் மும்மொழிக் கற்கை நிலைய இயக்குனர் லிலானி அமரசிங்க தலைமையில் இடம்பெற்றது.

வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த நிகழ்வு சனி (08) ஞாயிறு (09) ஆகிய இரு தினங்கள் இடம்பெற்றது.
 
க.பொ.த சாதாரண தரப்பரீட்சை மற்றும் அரச கரும மொழிகள் திணைக்கள பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களை  தயார் படுத்தும் நோக்கில்  நடாத்தப்பட்ட இக்கருத்தரங்கில் யாழ். மும்மொழிக் கற்கை நிலைய மாணவர்கள் பயிலுனர்களாக  கலந்து கொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment