Monday, November 24, 2014

பொலன்னறுவை மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பிரதிநிதிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

Monday, November 24, 2014
இலங்கை::
பொலன்னறுவை மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
    
இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த பிரதிநிதிகள் இம்முறை இடம்பெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே வெற்றி பெறுவார் என்பது உறுதி என தெரிவித்துள்ளனர்.

சுமார் 30 வருடங்களாக பயங்கரவாதம் எனும் இருளால் மூழ்கிக்கிடந்த எமது தேசத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த பெருமை அவரையே சாரும். தற்போது எமது நாட்டினை அபிவிருத்திகள் நிறைந்த பாதையில் கொண்டு செல்வதே அவரின் பிரதான நோக்கமாகும்.
அதுமட்டுமன்றி இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக மாற்றுவதில் முன்னின்று உழைத்து வரும் எமது ஜனாதிபதியைப் போல் இந்நாட்டினை திறமையாக ஆளக்கூடிய பலம் மிக்க வேறொரு தலைவர் வேறெங்கும் இல்லை , எனவும் தெரிவித்துள்ளனர்.

நேற்று (23) பொலன்னறுவை மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து ஜனாதிபதியுடன் இடம்பெற்ற உரையாடலிலே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
 
அப்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி பொலன்னறுவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி வேலைகள் தொடர்பாகவும் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி வேலைகள் தொடர்பிலும் அவர்களுடன் உரையாடினார்.
அமைச்சர் சி.பி. ரட்ணநாயக்க, பிரதியமைச்சர் சிறிபால கம்லத், சந்திரசிறி சூரியராய்ச்சி, பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் ரணசிங்க, மாகாண அமைச்சர் புஞ்சி பண்டா ரட்ணநாயக்க, வடமேல் மாகாண அமைச்ச்ர்கள் பிரதிநிதிகள் எனப்பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அநுராதபுரம் - திருகோணமலை பிரதான வீதி மக்கள் பாவனைக்கு!
 
அநுராதபுரம் - திருகோணமலை பிரதானவீதி மக்கள் பாவனைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கையளிக்கப்பட்டுள்ளது. சுமார் 9,500 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட இவ்வீதி 97 கிலோ மீற்றர் தூரஅளவாகும்.
    
இதன்மூலம் நாட்டின் எந்த பாகத்திலிருந்தும் கிழக்கு நோக்கி பயணிப்பவர்கள் வெகு இலகுவாகவும் வேகமாகவும் தமது பயணத்தினை மேற்கொள்ள முடியும்.

மஹிந்த சிந்தனைத்திட்டத்தின் கீழ் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இவ்அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment