Monday, November 24, 2014
இலங்கை::எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை இன்று (24) முதல் ஆரம்பமாகியுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கை::எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை இன்று (24) முதல் ஆரம்பமாகியுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று தொடங்கி எதிர்வரும் டிசெம்பர் மாதம் 4 ஆம் திகதியுடன் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை நிறைவுறும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் யு.அமரதாஸ தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியல்கள் பிரதேச செயலக அலுவலகங்களிலும் கிராம சேவகர் அலுவலகங்களிலும் காட்சிப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment