Monday, November 10, 2014
இலங்கை::யார் இந்த பரதேசி வடக்கு மாகாண முதல் மந்திரி: பித்தலாட்டங்களும் கற்பனாவாதமும்
மலிந்து கிடக்கும் தமிழ்த் தேசியக் பினாமி
கூட்டமைப்பு விக்னேசுவரனின் அரசியல்.
மலிந்து கிடக்கும் தமிழ்த் தேசியக் பினாமி
கூட்டமைப்பு விக்னேசுவரனின் அரசியல்.
வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் அண்மை யில் கொஸ்லாந்த மீரியா பெத்தவில் இடம்பெற்ற மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூற சென்றிருந்தார். ஒரு பகுதியில் ஏதேனும் அனர்த்தம் நிகழ்ந்தால் ஏனைய பகுதிகளிலுள்ளவர்கள் ஆறுதல் கூறுவதும், முடிந்தால் அவர்களுக்கு உதவி செய்ய முயற்சிப்பதும் இயல்பான ஒன்றுதான். அந்த வகையில் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மலையக மக்கள் மீது கரிசனை காட்டுவதொன்றும் தவறான காரியமல்ல. ஆனால் விக்னேஸ்வரன் தன்னுடைய நிலை மறந்து பேசியிருப்பதுதான் இங்கு விமர்சனத்துக்குரியதாகிறது. மலையகத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிடச் சென்ற விக்னேஸ்வரன் தாறுமாறாக வாக்குறுதிகளை வாரி வழங்கியிருக்கின்றார். பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு தேவையான அனைத்துதவிகளையும் தாம் வழங்கத் தயாராகவுள்ளதாகவும், பெற்றோரை இழந்து தவிக்கும் பிள்ளைகளின் மேம்பாட்டிற்கு தேவையான அனைத்தையும் தாம் செய்வதற்கு தயாராகவுள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றார்.
இலங்கையின் ஜனாதிபதி சொல்ல வேண்டியதை இலங்கையின் ஆள்புல எல்லைக்குள் அடங்கும் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சரான விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார். இவ்வாறு தெரிவித்ததன் மூலம் விக்னேஸ்வரன் வடக்கு மாகாண சபையை ஒரு தனி நிர்வாகம் போன்று காட்ட முற்படுகின்றார்?
விக்னேஸ்வரன் வடக்கு மாகாண சபையை பொறுப்பேற்று ஒரு வருடம் முடிந்துவிட்டது. இந்த ஒரு வருடத்தில் விக்னேஸ்வரனும் அவரின் கீழ் இருக்கின்ற மாகாண சபை உறுப்பினர்களும் வடக்கு மக்களுக்காக என்ன செய்தனர் என்று விசாரித்தால்,
செய்ததைவிடவும் பேசியதே அதிகம். ஒரு மாகாண சபையிலிருந்து எதை செய்ய வேண்டுமோ, அதனை செய்வதைவிடுத்து, எதை செய்யக் கூடாதோ அவற்றைத்தான் விக்னேஸ்வரனின் நிர்வாகம் செய்திருக்கிறது. வடக்கு மாகாண சபையிலிருந்து கொண்டு ஐக்கிய நாடுகள் சபைக்கு ஆலோசனை வழங்குவது, அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இலங்கை குறித்து எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்று புத்திமதி சொல்வது. இவற்றைத்தான் விக்னேஸ்வரனது படையணி செய்திருக்கிறது. ஆனால் ஒதுக்கப்பட்ட நிதியை முழுவதும் பயன்படுத்தி மக்களுக்கு தேவையான விடயங்களை செய்வதில் விக்னேஸ்வரன் கரிசனை காட்டியிருக்கவில்லை. அவ்வாறு சிந்தித்திருந்தால் ஒதுக்கப்பட்ட நிதியில் 75 வீதம் திறைசேரிக்கு திரும்பியிருக்காது.
வடக்கு மாகாண சபைக்காக கடந்த வருடம் ஒதுக்கப்பட்ட நிதி 5800 மில்லியன் ரூபாவாகும். ஆனால் அதில் வடக்கு மாகாண சபை செலவழித்திருப்பது வெறும் 25 வீதமான நிதியை மட்டுமே. ஆனால் இவ்வாறு ஒதுக்கப்பட்ட நிதியை கூட முழுவதுமாக செலவு செய்ய இயலாத வடக்கு மாகாண சபையின் நிர்வாகம் மாகாண சபைக்கு இன்னும் கூடுதல் அதிகாரம் தரவேண்டுமென்று வாதிடுகின்றது. இருக்கும் அதிகாரத்தை கொண்டு செய்யக் கூடியதை செய்ய முடியாத வடக்கு மாகாண சபையால் எவ்வாறு இன்னும் கூடுதல் அதிகாரத்தின் கீழ் விடயங்களை கையாளப் போகின்றது?
வடக்கில் மக்கள் பொருளாதார ரீதியாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக ஆயிரக்கணக்கான விதவை கள் இருக்கின்றனர். பெற்றோரை இழந்து தவிக்கும் பிள்ளைகளின் பிரச்சினைகள் கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுகின்றன.
இவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் ஒரு திட்டத்தையாவது வடக்கு மாகாண சபை உருப்படியாக மேற்கொண்டிருக்கின்றதா அல்லது அதற்கான அடித்தளத்தையாவது இட்டிருக்கின்றதா? வடக்கு நிலைமை இவ்வாறிருக்க எவ்வாறு, விக்னேஸ்வரன் மலையக மக்களுக்கு உதவப் போவதாக குறிப்பிடுகின்றார்? வடக்கு மாகாண சபையை கொண்டு வடக்கு மக்களுக்கே உருப்படியாக எதனையும் செய்ய முடியாத விக்னேஸ்வரன் எவ்வாறு வடக்கு மாகாண சபையின் மூலம் மலையக மக்களுக்காக உதவப் போகின்றார்? மலையக மக்கள் மத்தியில் பேசிய விக்னேஸ்வரன், இந்த துயரத்தின் மத்தியிலும் மகிழ்ச்சியடையக் கூடிய விடயமொன்றும் நடந்திருக்கிறது. அதாவது, மலையக மக்களுக்கும் வடக்கு மக்களுக்கும் இடையிலான உறவு வலுவடைந்தி ருப்பதுதான் என்றும் கூறியிருக்கின்றார். அதாவது மலையக மக்கள் பலர் மண் சரிவினால் இறக்க நேர்ந்ததால்தான், உறவு வலுவடைந்திருக்கிறது.
விக்னேஸ்வரனதும் கூட்டமைப்பின் தலைவர்களதும் நடவடிக்கைகளை தொகுத்து பார்த்தால் எந்தளவிற்கு இவர்களின் நடவடிக் கைகளில் போலித்தனம் மேலோங்கியிருக்கிறது என்பதை விளங்கிக்கொள்ள முடியும். வடக்கு மாகாண சபையின் ஊடாக எத்தனையோ விடயங் களை செய்யக் கூடியதாக இருக்கின்ற போதிலும் கூட, அதனை செய்வதற்கு மனமில் லாமல் எதிர்ப்பரசியல் கோசங்களை எழுப்பிவரும், கூட்டமைப்பினர்.
மலையக மக்களின் நல்வாழ்வு பற்றி சிந்திக்கின்றார்கள் என்பதில் சிறிதளவாவது உண்மை இருக்க முடியுமா? தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தான் போக வழியைக் காணவில்லையாம். இப்படி தொடங்கி முடிவதாக அந்த பழமொழி அமைந்திருக்கும். விக்னேஸ்வரனின் நிலையும் இப்படியான ஒன்றுதான். தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை உருப்படியாக பயன்படுத்திக் கொள்ளாத ஆகக் குறைந்தது அதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ளாத விக்னேஸ்வரன்தான், மலையக அரசியல் தலைவர்களுக்கு ஆலோசனை வழங்கியிருக்கின்றார்.
இதற்கு பின்னால் இன்னொரு போலித்தனமும் இருக்கிறது. பொதுவாக மலையக மக்கள் தொடர்பில் வடக்கிலுள்ள அரசியல் தலைவர்களுக்கு பெரிய கரிசனை இருந்ததில்லை. வடக்கு கிழக்கில் குடியேற்றம் என்னும் பெயரில், மலையக மக்களை குடியேற்றினர். ஆனால் எல்லைப் புறங்களிலேயே அவர்களை குடியேற்றினர். இவ்வாறு குடியேற்றப் பட்டவர்கள்தான் இன்று வடக்கு கிழக்கில் வாழும் மலையக வம்சாவளி மக்களாவர். இவ்வாறு அவர்களை குடியேற்றியபோதும் அவர்களும் ஏனைய மக்கள் போன்று நடத்தப்படக் கூடிய சூழல் இருந்திருக்கவில்லை. எல்லைப் புறங்களில் குடியமர்த்தப்பட்டதால், பிரச்சினைகளின் போது உடனடியாக பாதிக்கப்படுபவர்களாக அவர்களே இருந்தனர். இவ்வாறு கவனிப்பாரற்ற நிலையில் இருந்தவர்களில் பலர் இன்று வடக்கு கிழக்கில் நகரசுத்தி தொழிலாளர்களாக இருக்கின்றனர்.
ஆனால் அவர்களை தங்களின் சுயநல அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்வதில் தமிழ்த் தலைவர்கள் எப்போதுமே அக்கறையாக இருந்தனர் - இருக்கின்றனர். இதன் தொடர்ச் சிதான் தற்போது விக்னேஸ்வரன் மலையக மக்கள் மீது காட்டியிருக்கும் கரிசனை. தங்க ளின் சுயநலனுக்கு தேவையெனில் எதனையும் பேசவும், எவருடன் கைகுலுக்கவும் தயங்காத தமிழ்த் தேசியவாதம் பேசும் அரசியல் தலைவர்கள், அதுவே தங்களுக்கு வாக்களித்து தங்களை தலைவர்களாக்கிய மக்களுக்காக எனின் ஆயிரம் கொள்கைகள் பேசுவார்கள். தன்மானம் பற்றி பேசுவார்கள்






No comments:
Post a Comment