Monday, November 10, 2014

நிபந்தனையற்ற அடிப்படையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவளிக்கப்படும்: தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார!

Monday, November 10, 2014
இலங்கை::நிபந்தனையற்ற அடிப்படையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவளிக்கப்படும் என தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
 
மல்வில சர்வவோதய கட்டடத்தில் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
ஜனாதிபதியினால் ஆற்றப்பட்ட சேவைகள், எதிராக போட்டியிடும் சக்திகளின் தீய உள் நோக்கங்கள் போன்றன குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
 
ஜனாதிபதி முறைமையில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பதனை இந்த தேர்தலிலும் எதிர்வரும் காலங்களிலும் நாம் வலியுறுத்துவோம்.
 
காலணித்துவத்திற்கு எதிரான, தேசிய சுதந்திரத்தைப் போற்றும் ஜனாதிபதி மஹிந்தவிற்கே ஆதரவளிக்கின்றோம்.
தேசிய சமாதானத்தை நிலைநாட்ட இன்னமும் அவகாசம் காணப்படுகின்றது.
 
ஜனாதிபதியின் வெற்றிக்காக இந்த நாட்டின் முற்போக்கு சக்திகளுடன் இணைந்து செயற்படுவோம் என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment