Monday, November 10, 2014
இலங்கை::ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஸ எதிர்வரும் 19 அல்லது 20ம் திகதி அறிவிப்பார் எனத்
தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தின் உயர்மட்டத் தரப்பிலிருந்து இந்த தகவல்
வெளியிடப்பட்டுள்ளது.
பெரும்பாலும் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஆளும் எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி தேர்தலுக்கு ஆயத்தமாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு தரப்புக்களும் பேதங்களை களைந்து தங்கள் பக்க கூட்டணிகளை வலுப்படுத்திக்கொண்டு தேர்தலில் போட்டியிட முயற்சி எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மூன்றாம் தடவையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா என ஜனாதிபதி உச்ச நீதிமன்றின் கோரிய சட்ட விளக்கம் பற்றிய பதில் இன்று வெளியிடப்பட உள்ளது.

No comments:
Post a Comment