Monday, November 10, 2014

இலங்கையில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் ஐவரையும் இந்தியாவுக்கு அனுப்பிவைக்க இலங்கை அரசு இண கம்!

Monday, November 10, 2014
சென்னை::இலங்கையில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் ஐவரையும் இந்தியாவுக்கு அனுப்பிவைக்க இலங்கை அரசு இணங்கியுள்ளது என்று பா.ஜ.கவின் மூத்த பிரமுகரான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
 
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இலங்கை ஜனாதிபதியும் பேசிக்கொண்டதற்கிணங்க இவர்களை இந்தியாவுக்கு அழைத்துவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார். மீனவர் விவகாரம் குறித்து இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை நேற்று ஞாயிற்றுக்கிழமை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார் என்றும் சுவாமி தெரிவித்துள்ளார்.
 
இதன்போது இலங்கை நீதிமன்றில் மரணதண்டனை பெற்றுள்ள இந்திய மீனவர்கள் ஐவரையும் இந்தியச் சிறைக்கு மாற்றுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இணங்கியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஐவரும், போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் 30ஆம் திகதி, ஐவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது
 

No comments:

Post a Comment