Tuesday, November 11, 2014

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடப் போவதில்லை: சந்திரிக்கா நிராகரிப்பு!

Tuesday, November 11, 2014
இலங்கை::எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக போட்டியிடுமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் விடுக்கப்பட்ட அழைப்பை அவர் நிராகரித்துள்ளார்.
 
ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் காசிம் மற்றும் மங்கள சமரவீர ஆகியோர் கடந்த வாரத்தில் சந்திரிக்காவை சந்தித்து இந்த அழைப்பை விடுத்தனர்.
 
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய தலைவர் ரணில் விக்கிரமசிங்க பொதுவேட்பாளராக போட்டியிடுவாரானால், அவருக்கு ஆதரவாக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைப்பது கடினம்.
 
எனவே அதற்கு பொருத்தமானவர் சந்திக்காவே என்று காசிம் ரணில் விக்கிரமசிங்கவிடம் விளக்கியுள்ளார்.
 
இதனையடுத்து ரணில் விக்கிரமசிங்க, சந்திரிக்காவை சந்திக்குமாறு காசிமிடம் கோரியுள்ளார்.
 
இதனை சந்திரிக்கா நிராகரித்துள்ள போதும் பொதுவேட்பாளருக்கு தாம் ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளார்.
 
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது பொது வேட்பாளராக போட்டியிடப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment