Monday, November 17, 2014

எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளராக எவரை நிறுத்தினாலும் எமக்கு சவால்கள் இல்லை: அமைச்சர் சுசில் பிரேமஜயந்த!

Monday, November 17, 2014
இலங்கை::எதிர்க்கட்சிகள் இணைந்து பொது வேட்பாளர் ஒருவரைத் தேடிக்கொண்டி ருக்கும் நிலையில், ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வதற்கான சகல பூர்வாங்க ஏற்பாடுகளையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பூர்த்தி செய்திருப்பதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

 
ஜனாதிபதித் தேர்தலுக்காக அடிமட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஐ.ம.சு.முவின் மாகாண சபை உறுப்பினர் கள், கட்சி இணைப்பாளர்கள் உள்ளிட்ட சகலரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதுடன். அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட் டிருப்பதாக அமைச்சர் கூறினார்.
 
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்புக்கு இன்னமும் சில தினங்களே எஞ்சியிருக்கும் நிலையில் எதிர்க்கட்சியினர் இன்னமும் பொது
வேட்பாளரைத் தேடி வருகின்றனர்.
யார் வேட்பாளராகத் தெரிவுசெய்யப் பட்டாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை எதிர்கொள்ளக் கூடிய பலம் எவருக்கும் இல்லை. எனினும், இவ்வாறான அரசியல் கட்சிகளைப் பயன்படுத்தி சர்வதேச சக்திகள் செயற்படலாம் என்ற சவாலே எமக்குக் காணப்படுகிறது.
 
மத்திய கிழக்கு நாடுகளில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி ‘அராபிய வசந்தம்’ என்ற பெயரில் நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துகிறோம் எனக் கூறிக்கொண்டே மேலைத்தேய நாடுகள் அந்த நாடுகளை சீர் குலைத்துள்ளன. அவ்வாறான முயற்சிக்கு இலங்கையில் இடமளிக்கக் கூடாது. இலங்கையில் இதுவரை இருந்த சீரழிவு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு தற்பொழுது அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனைத் தடுப்பதற்கு எந்தவொரு சக்திக்கும் இடமளிக்கக் கூடாது என்பதே பாரிய சவாலாக உள்ளது.
 
மூன்றாவது தடவையும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென ஜே.வி.பி.யினர் கூறுகின்றனர். கடந்த காலங்களில் அவர்களின் செயற்பாடுகளை நாம் திரும்பிப் பார்க்க வேண்டும். 1970ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனநாயக ஆட்சிக்கு எதிராக ஜே.வி.பி.யினர் போராடினர். 1988ஆம் ஆண்டு தேர்தலில் வாக்களித்தவர்களை அவர்கள் கொலை செய்தனர். நீதிமன்றத் துக்கோ அல்லது ஜனநாயகத்துக்கோ மதிப்பளித்து செயற்படாத இவர்கள் தற்பொழுது நீதிமன்றத்தின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளவில்லையெனக் கூறு கின்றனர்.
 
மேலைத்தேய நாடுகளுக்கு எதிர்ப்பு, அமெரிக்க எதிர்ப்பு என வெளி உலகிற்குக் காட்டிக்கொள்ளும் ஜே.வி.பி. நாட்டில் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்தும் மேலைத்தேய சக்திகளை ஊக்குவிக்கும் வகையில் ஜே.வி.பியினர் செயற்பட்டு வருகின்றனர்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை இல்லாமல் செய்யப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
 
1978ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜயவர்த்தன நிறைவேற்று அதிகார முறையைக் கொண்டு வருவதற்கு கைதூக்கியவர்களில் ரணில் விக்ரமசிங்கவும் ஒருவர். இந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிப் பதவிக்கே அவர் போட்டியிட்டவர். இந்த நிலையில் தற் பொழுது நிறைவேற்று அதிகார முறை ஒழிக்கப்பட வேண்டும் எனக் கூறுவது எந்த வகையில் நியாயம். ஒன்றிணைந் திருக்கும் எதிர்க்கட்சிக் கூட்டணியில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைக்குப் போட்டியிட்ட வேட்பாளர்கள் பலர் உள்ளனர். இவர்கள் தற்பொழுது இதனை எதிர்ப்பதாகக் காட்டிக்கொள்கின் றனர். இவற்றுக்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும்.
பொது வேட்பாளர் ஒருவரையே தேர்வுசெய்ய முடியாத எதிர்க்கட்சிகள் எவ்வாறு ஜனாதிபதித் தேர்தலை முகங்கொடுக்கப் போகின்றன என்றும் அமைச்சர் கேள்வியெழுப்பினார்.
 
மஹிந்த சிந்தனை மற்றும் மஹிந்த சிந்தனை எதிர்கால நோக்கு ஆகியவற்றில் வழங்கிய உறுதிமொழிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நிறை வேற்றியுள்ளார். முதலாவது பதவிக் காலத்தில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதாக உறுதிமொழி வழங்கியிருந்தார். இது நிறைவேற்றப் பட்டுள்ளது. அதேபோல இரண்டாவது பதவிக் காலத்தில் நாட்டை அபிவிருத்தி செய்வதாக உறுதிமொழி வழங்கி யிருந்தார். இதற்கமைய அபிவிருத்திகள் பாரியளவில் மேற்கொள்ளப்படுகின்றன என்றார்.
பெரும்பான்மை வாக்குகள் உறுதி
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கடந்த முறையைவிட அதிகமான வாக்குகளை இம்முறை பெற்றுக்கொள்வார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எவருக்கும் பெரும்பான்மை வாக்குகள் கிடைக்காது என எழுப்பப்படும் சந்தேகங்க ளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைப்பார். 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை ஜனாதிபதி பெற்றுக்கொள்வார் என்பதே தனது தனிப்பட்ட நிலைப்பாடு என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment