Monday, November 17, 2014
இலங்கை::கடந்த வாரம் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் சென்னைக்கு ஒரு நினைவுச் சொற்பொழிவு ஆற்றச் சென்றிருந்தார்.
இலங்கை::கடந்த வாரம் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் சென்னைக்கு ஒரு நினைவுச் சொற்பொழிவு ஆற்றச் சென்றிருந்தார்.
அங்கு வருமாறு அவருக்கு மட்டுமே அழைப்பிதழ் வழங்கப்பட்ட தாம். நிச்சயம் ஏற்பாட்டாளர்களால் அவருக்கு செலவும் வழங்கப் பட்டிருக்கும். ஆனால் அவருடன் கூடவே இருவர் தமது சொந்தப் பணத்திலோ அல்லது கட்சியின் கணக்கிலோ செலவழித்துச் சென்றனராம்.
ஒருவர் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை, மற்றவர் தேசியப் பட்டியல் எம்.பி சுமந்திரன். இவர்கள் ஏன் சென் றனர் என்று கேட்டால் நகைச்சுவையாக உள்ளது. முதலமைச்சருக்கு அரசியல் அனுபவம் போதாதாம். தமிழக ஊடகவியலாளர்களின் குறுக்குக் கேள்விகளுக்கு அவரால் தந்திரமாகப் பதில் கூற முடியாதாம்.
அவர்களிடம் கண்டதையும் பேசி இந்தியாவைத் தம்முடன் பகைக்க வைத்து விடுவாராம். அதன் பின் அங்குள்ள இவர்களது உறவினர்களுக்கு இந்திய அரசால் கிடைப்பதும் கிடைக்காது போய்விடுமாம். அதனால் கூடவே சென்று அவரது வாய்க்குப் பூட்டுப் போட்டு வைத்திருந்தனராம். எத்தனை பேரை குறுக்கு விசாரணை செய்த முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவரது நிலை இப்படியிருக்கிறது. அரசியலில் இதுவெல்லாம் சகஜம் என்பது இதைத்தானோ? இது ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தியின் தழுவல்.

No comments:
Post a Comment