Monday, November 17, 2014
இலங்கை::புலிகளின் டயஸ்போரா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் ஆலோசனைக்கிணங்கவே பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த ரணில் விக்ரமசிங்ஹ தீர்மானித்ததாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
நாட்டை சீரழிக்கும் நோக்குடன் டயஸ் போராக்கள் முன்வைத்துள்ள அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டுள்ள ரணில் நாட்டுக்கு என்ன நிகழ்ந்தாலும் பரவாயில்லை. ஆட்சியைப் பிடிப்போம் என்ற வேட்கையுடன் செயற்படுவதாகவும் அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டினார்.
ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணிக்கு அமைச்சர் விமல் வீரவன்ச பத்தரமுல்லையில் உள்ள தேசிய சுதந்திர முன்னணிக் கட்சி அலுவலகத்தில் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தினார். இம் மாநாட்டிலேயே அமைச்சர் விமல் வீரவன்ச மேற்கண்டவாறு தெரிவித்தார். இம் மாநாட்டில் முஹமட் முசம்மிலும் கலந்து கொண்டார்.
விமல் வீரவன்ச அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் :-
இதில் ரணிலா, கரு ஜயசூரியவா, அல்லது சஜித்தா, அர்ஜுனவா, சரத் என் சில்வாவா அல்லது சந்திரிக்கா பண்டார நாயக்காவா, யார் பொது வேட்பாளர். எதிர்க் கட்சிகள் ஒரு நோக்கில் இருந்துகொண்டு இன்னும் முடிவு எடுக்காமல் திண்டாடுகின்றன. மஹிந்தவுடன் எதிராக நிற்கக் கூடிய ஒருவர் இந்த எதிர்க் கட்சிக்குள் இல்லை என்றே நான் திட்டவட்டமாகச் சொல்வேன்.
இந்த நாட்டை கட்டி எழுப்புகின்ற மஹிந்த ராஜபக்ஷவையும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபயவையும் அவர்களது அதிகாரக் கதிரையில் இருந்து அகற்ற வேண்டுமென்று சில வெளிநாடுகள் நினைக்கின்றன. அத்துடன் என். ஜி. ஓ. காரர்களான ஜயந்த விக்கிரம ரட்ண, நிர்மலா சந்திரண போன்றவர்கள் நிதியைத் திரட்டி இந்த ஆட்சியை மாற்றுவதற்கு முயற்சிக்கின்றனர். இவர்களுக்கு சிறுபான்மை வாக்குகள் இருக்கின்றன. முற்று முழுதாக ஜனாதிபதி மஹிந்தவுக்கு உள்ள பெளத்த வாக்குகளை திசை திருப்புவதற்கே ஜனாதிபதி முறைமை ஒழிப்பு என்ற அணியின் கீழ் திரண்டுள்ளனர்.
ஐ. தே. கட்சி கடந்த 20 வருட கால மாக தோல்வியுற்றது. அவர்களுக்கு அதிகாரத்தை பிடிக்க வேண்டும். அதற்காக எதையும் அவர்கள் செய்யத் தயாராக உள்ளனர். பெளத்த மக்களது வாக்குகளை சிதரடிக்கவே இவர்கள் முயற்சிக்கின்றனர். அத்துடன் பெளத்த வாக்குகளை பெற்றுக்கொள்ள பெளத்த கட்சிகளையும் அரவணைத்துக் கொண்டுள்ளனர்.
ரீ. என். ஏ. தலைவர் இரா சம்பந்தன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் மட்டுமல்ல முஸ்லிம் மக்களின் ஆதரவைப் பெற்றுத் தருவதாக ரணிலிடம் பேசியுள்ளார். அவர் 6 க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்வைத் துள்ளார். அவரது கோரிக்கை திவயின சிங்களப் பத்திரிகையில் முன்பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
வட கிழக்கில் உள்ள 15 ஆயிரம் இராணுவப் படைகளை அகற்ற வேண்டும். வட, கிழக்கில் சுயநிர்ணய சபை வழங்கப்படல் வேண்டும். என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளார். இந்தியாவில் இருந்து கொண்டு முதலமைச்சர் சி. விக் னேஸ்வரனும் இதேபோன்ற கருத்துக் களை தெரிவித்துள்ளார். சிவாஜிலிங் கமும் தான் ஆயுதக் குழுக்களில் இருக்கும் போது யாழ் தேவி புகையிரதத்திற்கு முதலில் குண்டு வீசியவன் நானே என்று சொல்லி யிருக்கின்றார். அரசாங்கம் சிவாஜி லிங்கத்தைப் பிடித்து சிறையில் அடைக்க வேண்டும். அவர் மேலும் வடக்கில் உள்ள சகல புத்தர் சிலைகநிளுயம் அகற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள் ளார்.
ஜனாதிபதி முறைமையை நீக்கி இந்த அரசியல் அமைப்பை திருத்த வேண்டிய அவசியம் எங்களது கட்சிக்கு இல்லை. தற்போது அமுலில் உள்ள அரசியல் அமைப்பு 18 முறைகள் திருத்தி யமைக்கப்பட்டுள்ளது. ஆனால் எங்களது நிலைப்பாடு முழு அரசியல் அமைப்பையும் மாற்றியமைப்பதே.
எமது கட்சியின் கோரிக்கைகளை ஜனாதிபதி ஏற்று 300 உள்ளூர் கைத்தொழில் சபைகளை ஏற்படுத்துவதற்கு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கியுள்ளார் என்றார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை எதிர்த்து நிற்கக் கூடிய ஒரு எதிர்க்கட்சித் தலைவர் இல்லாத நிலையில் கடந்த மூன்று மாத காலமாகப் பொது வேட்பாளர் ஒருவரைத் தேடி அலையும் எதிரணியினர் நாட்டை ஆளும் ஆணையை மக்களிடம் கோரவிருப்பது பெரும் வேடிக்கையான விடயம் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
பொது வேட்பாளர் தொடர்பில் தமக்குள்ளே ஒரு ஒற்றுமையைக் காண முடியாத இவர்கள் தேர்தலில் வெற்றி பெற்று நாட்டை ஆளப்போகிறார்களாம். இந்த எதிரணியினரின் கனவு எதுவுமே பலிக்காது எனவும் அமைச்சர் வீரவன்ச தெரிவித்தார். தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டாலும் இவர்களால் பொது வேட்பாளர் பிணக்கிற்கு
தீர்வுகாண முடியாதிருக்கும்.
இதனாலேயே இதுவரை காலமும் தமது விதண்டாவாதத்தினால்
அரசாங்கத்திற்கு எதிராக நின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்று பிரதான தமிழ்க் கட்சிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்க கொள்கையளவில் தீர்மானித்துள்ளன. விரைவில் இவர்களது ஆதரவு தொடர்பான அறிவித்தல் வெளியாகும் எனவும் அமைச்சர் வீரவன்ச தெரிவித்தார்.
இதேவேளை எதிர்க்கட்சியினரால் பரப்பப்பட்டுவரும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் எதிர்க்கிறார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஜனாதிபதி ஒழிப்பார். இலங்கையில் போர் இடம்பெற்றமை காரணமாகவே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை மஹிந்த ராஜபக்ஷவினால் ஒழிக்க முடியவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை மற்றும் தேர்தல் முறைமை ஆகியவற்றை அரசாங் கம் உரியவகையில் மாற்றம் செய்யும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment