Friday, November 14, 2014

புலிகள் அமைப்பின் காவல் துறையில் பணியாற்றிய முன்னாள் புலி உறுப்பினர் இனந்தெரியாதோரால் சுட்டுக்கொலை!

Friday, November 14, 2014
இலங்கை:புலிகள் அமைப்பின் காவல் துறையில் பணியாற்றிய முன்னாள் புலிபோராளியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளருமான குடும்பஸ்தர் ஒருவர் மன்னார், வெள்ளாங்குளம் பகுதியில் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 
 
சுட்டுக்கொள்ளப்பட்ட புலிகள் அமைப்பின் காவல் துறையில் பணியாற்றிய முன்னாள் புலிபோராளி  புலிகளின் அமைப்பை மீன்டும் இலங்கையில் உருவாக்க முன்னின்றவர் எனவும்

சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் புலம் பெயர் புலிகளின்  அமைப்புக்களால் வழங்கப்பட்ட நிதி ஊடாக பயன்படுத்தி செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
 
நேற்றுமுன்தினம் இரவு 8.30 மணியளவில் இந்தக்  சம்பவம் இடம்பெற்றுள்ளது.வெள்ளாங்குளம், கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் (வயது  40) என்ப வரே சுட்டுக் கொல்லப்பட்ட வராவார்.
காதுப் பகுதியில் துளைத்த துப்பாக்கிச் சன்னத்தால் அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
இனந்தெரியாத மூவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர். வீட்டுக்குள் இருந்த நகுலேஸ்வரனை வெளியே அழைத்து துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர் என்று உயிலங் குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த நகுலேஸ்வரன் புலிகள் அமைப்பின் காவல் துறையில் பணியாற்றியவர் என்றும், புனர்வாழ்வு வழங்கப்பட்டு அவர் விடுவிக்கப்பட்டிருந்தார் என்றும் அவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.
நகுலேஸ்வரனின் மனைவி ஆசி ரியை ஆவார். இவருக்கு இரு பிள்ளைகள் உள் ளனர். தமக்குக் கிடைத்த இந்திய வீட்டுத் திட்ட வீட்டுக்காகக் கல் அரிந்து கொண்டிருந்த சமயமே இந்தச் சூட்டுச் சம்பவம் நடந்துள்ளது என்று கூறப் படுகின்றது.
இந்தச் சம்பவம் தொடர்பில் உயிலங்குளம் பொலிஸார் விசாரணை கைளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment