Friday, November 14, 2014

முன்னாள் புலி உறுப்பினர் கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி மீட்பு: 4 பேரிடம் தீவிர விசாரணை!

Friday, November 14, 2014
இலங்கை::புலிகள் அமைப்பின் காவல் துறையில் பணியாற்றிய முன்னாள்  புலி உறுப்பினர் கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன்  மீது சூடு நடத்தப் பயன்படுத்தப்பட்ட ரி-56 ரகத் துப்பாக்கியை கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சூட்டுச் சம்பவம் தொடர்பில் 4 பேரிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ரி-56 ரகத் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட இடத்திலிருந்து 200 மீற்றர் தூரத்தில் வேலியோரமாக வீசப்பட்ட நிலையில் பொலிஸார் மோப்ப நாயின் உதவியுடன் அதனை கண்டு பிடித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் திணைக்களத்தின் பதில் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கொலைச் சம்பவம் தனிப்பட்ட முரண்பாடு காரணமாக ஏற்பட்டிருக்கக் கூடும் என்ற சந்தேகம் காணப்படுகிறது.

இது தொடர்பில் விசாரணை செய்ய 4 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

No comments:

Post a Comment