Friday, November 14, 2014
இலங்கை::வடக்கு இராணுவ முகாம்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய ஆவணங்கள் வவுனியாவில் மீட்கப்பட்டுள்ளன.
இலங்கை::வடக்கு இராணுவ முகாம்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய ஆவணங்கள் வவுனியாவில் மீட்கப்பட்டுள்ளன.
வடக்கில் காணப்படும் இராணுவ முகாம்களின் எண்ணிக்கைஞூஞூ அவற்றில் நிலைநிறுத்தப்பட்டுள்ள படைவீரர்களின் எண்ணிக்கை போன்ற விபரங்கள் இந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் குறித்த வீட்டின் உரிமையாளரை பாதுகாப்பு தரப்பினர் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட நபர் முன்னாள் புலி உறுப்பினர் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த ஆவணங்கள் எவ்வாறு குறித்த நபருக்கு கிடைக்கப்பெற்றது என்பது பற்றிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நபர் தமிழ் அரசியல் கட்சியொன்றின் செயற்பாட்டாளர் என பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:
Post a Comment