Friday, November 14, 2014
இலங்கை:முன்னாள் பெருந்தெருக்கள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொலை வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை:முன்னாள் பெருந்தெருக்கள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொலை வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
வெலிவேரிய காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற புத்தாண்டு விழா கொண்டாட்ட மரதன் ஓட்டப் போட்டி ஆரம்ப நிகழ்வின் போதுஞூஞூ மேற்கொள்ளப்பட்ட புலிகளின் தற்கொலை குண்டுத் தாக்குதலில் அமைச்சர் ஜெயராஜ் உள்ளிட்ட 13 பேர் கொல்லப்பட்டனர்.
2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது.
கம்பஹா உயர் நீதிமன்றில் இந்த தாக்குதல் சம்பவம் குறித்த வழக்கு விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
உயர் நீதிமன்ற நீதவான் விடுமுறை காரணமாக வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 9ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்குடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களுக்கு எதிராக பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ஊடாக 31 குற்றச்சாட்டுக்களை சுமத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் லக்ஸ்மன் குரே, காங்கேசன்துறையைச் சேர்ந்த செல்வராஜ் கிருபாகரன் மற்றும் தம்பையா பிரகாஷ் ஆகியோர் இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:
Post a Comment