Monday, November 17, 2014

புலிகளுக்கு ஆதராவாக ஐ.நாவுக்கு போர்க்குற்றச்சாட்சியங்களை அனுப்ப முயன்றவரை விடுதலை செய்ய அரசாங்கம் மறுப்பு!

Monday, November 17, 2014
இலங்கை::புலிகளுக்கு ஆதராவாக ஐ.நாவுக்கு
போர்க்குற்றச்சாட்சியங்களை அனுப்ப முயன்றவரை விடுதலை செய்ய அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
 
போர்க்குற்ற சாட்சியங்களுக்கான படிவங்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கிருஷ்ணராஜா என்பவர் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டிருந்தார்.
 
இவரை விடுதலை செய்யுமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சையத் ராத் ஹுசைன் இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். எனினும் அரசாங்கம் அவரது வேண்டுகோளை நிராகரித்துள்ளது.
 
கிருஷ்ணராஜாவுக்கு  புலிகள் அமைப்புடன் உள்ள தொடர்புகள் குறித்து விரிவாக விசாரிக்கப்பட வேண்டியிருப்பதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment