Tuesday, November 18, 2014
இலங்கை::ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கூட்டணி கட்சியான ஜாதிக ஹெல உறுமய கட்சி அரசாங்கத்தை விட்டு வெளியேறியுள்ளது.
இலங்கை::ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கூட்டணி கட்சியான ஜாதிக ஹெல உறுமய கட்சி அரசாங்கத்தை விட்டு வெளியேறியுள்ளது.
கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் வகித்து வந்த பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
கொழும்பில் சற்று முன்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இந்த விடயம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப மற்றும் ஆய்வு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக சம்பிக்க ரணவக்க அறிவித்துள்ளார்.
இதேவேளை, மேல் மாகாணசபையில் அமைச்சர் பதவியை வகித்து வந்த கட்சியின் சட்ட ஆலோசகர் உதய கம்மன்பிலவும் அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கடந்த நான்கு ஆண்டு கால ஆட்சியில் நாட்டின் அரசியல் சீரழிந்துள்ளதாக சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இனி ஜாதிக ஹெல உறுமயவிற்கு தொடர்பு கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தினம் முதல் மனிதாபிமான மீட்புப் பணகிள் ஆரம்பமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
கொள்கைகளின் அடிப்படையில் மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜாதிக ஹெல உறுமயவின் ராஜினாமா கடிதங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டனவா இல்லையா என்பது குறித்து அரசாங்கம் தரப்பிலிருந்து உத்தியோகபூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

No comments:
Post a Comment