Tuesday, November 18, 2014

இந்திய எல்லை அருகே பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவில்லை: சீனா மறுப்பு!

Tuesday, November 18, 2014
பீஜிங்::ஜம்மு காஷ்மீர் மாநிலம், சர்வதேச எல்லை அருகே உள்ள ரஜோரி பகுதியில் பாகிஸ்தான் சிப்பாய்களுக்கு சீன ராணுவ வீரர்கள் பயிற்சி அளிப்பதாக இந்திய எல்லை பாதுகாப்பு படை மத்திய அரசுக்கு தகவல் தெரிவித்து ‘உஷார்’படுத்தி இருப்பதாக சமீபத்தில் பத்திரிக்கைகளில் தகவல் வெளியானது.

இத்தகவல் உண்மையானது அல்ல என தற்போது சீனா மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நாட்டு வெளியுறவு துறை செய்தி தொடர்பாளரான ஹாங் லெய் கூறுகையில், பாகிஸ்தான் சிப்பாய்களுக்கு சீன ராணுவ வீரர்கள் பயிற்சி அளிப்பதாக வந்த செய்தி உண்மைகளை அடிப்படையாக கொண்டிருக்கவில்லை என்று கூறியுள்ளார்.
 
எனினும் சீனாவிடமிருந்து தான் பாகிஸ்தான் அதிக அளவில் ஆயுதம் இறக்குமதி செய்வதாகவும், எனவே ஆயுதங்களை கையாள அவர்களுக்கு சீனா பயிற்சியளிப்பது அசாதாரணமான ஒன்றல்ல என அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment