Tuesday, November 18, 2014
இலங்கை::யுத்தம் நிறுத்தம் அமுல்படுத்தப்பட்ட காலத்தில் புலிகள் மீள ஒருங்கிணைவதனை அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க கண்டுகொள்ளவில்லை என முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட தெரிவித்துள்ளார்.
இலங்கை::யுத்தம் நிறுத்தம் அமுல்படுத்தப்பட்ட காலத்தில் புலிகள் மீள ஒருங்கிணைவதனை அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க கண்டுகொள்ளவில்லை என முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட தெரிவித்துள்ளார்.
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவினால் எழுதப்பட்ட அதிஸ்டான என்னும் நூலில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திட்ட காலத்தில் புலிகள் இராணுவ ரீதிய மீள ஒருங்கிணைவதில் முனைப்பு காட்டியதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்திற்கு சுட்க்காட்டிய உயர் படையதிகாரிகளை ரணில் தலைமையிலான அரசாங்கம் கடுமையாக நடத்தியதுடன், இந்த விடயத்தை பெரிதாக கண்டுகொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.ரணில் விக்ரமசிங்க படையினரை மரியாதையாக நடத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக ஒர் சந்தர்ப்பத்தில் ஏனைய கனிஸ்ட அதிகாரிகளின் முன்னிலையில் வைத்து தம்மை ரணில் விக்ரமசிங்க, கடுமையாக திட்டியதாக வசந்த கரன்னாகொட தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் அமைந்துள்ள விடுதலைப் புலி முகாம் பற்றி விபரித்த போதே ரணில் தம்மை திட்டியதாகக் குறிப்பிட்டுள்ளார்.யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுடன் முரண்பாட்டு நிலைமை காணப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இருவருக்கும் இடையில் கடுமையான கருத்து மோதல்கள் உருவானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரபாகரனுடனேயே யுத்தம் செய்கின்றோம், சிறிய பிள்ளைகளைப் போன்று ஒருவருடன் மோதிக் கொள்ளாமல் யுத்தத்தை வென்றெடுப்பதில் கவனம் செலுத்துங்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அறிவுரை வழங்கியதாக வசந்த கரன்னாகொட நூல் வெளியிட்டு விழாவில் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment